"I love Thamizh... i think its the most beautiful language and can express even the slightest and most intricate emotions in a much more better and more beautiful way than English or any other language can ever hope to"
யாருமற்ற இரவு. உன் கடிதம் வராத நாளைத் தொடர்ந்து வரும் ஓர் அடர்த்தியான இரவு.உறக்கம் கொள்ளாத பெட்டை நாய் ஒன்று வீதியில் தனியே ஊளையிட்டு திரியும் ஒரு நள்ளிரவு. நம்மிருவருக்கும் பிடித்த நிலா கூட மேகத்தில் தன்னை மறைத்துக்கொண்ட ஓர் பின்னிரவு. உன் கடிதத்தின் வார்த்தைகளை மெத்தையாக்கி அதில் உறங்கியவன் பஞ்சு மெத்தையின் கணம் தங்காமல் வலியில் விழித்துக்கொண்ட ஓர் இரவு.உன் கடிதம் வராத என்னுடைய நேற்று இன்னும் முடியவில்லை, அது உன்னுடைய நாளைக்குள் பிரவேசித்துக்கொண்டிருகிறது .நேற்றைய முன்னிரவில் முதல் முறை தோன்றிய வலி இன்னும்கூட முகத்தில் தேங்கியுள்ளது. "குரல் சரியில்லையே?" என்று அம்மா கேட்டபோதும், "என்னடா முகம் வாடியிருக்கு?" என்று நண்பர்கள் கேட்டபோதும் சொல்ல என்னிடம் பதிலேதுமில்லை. இன்று வரையில் நான் நம்பியதில்லை வராத உன் கடிதம் எனக்கு இத்தனை வலிதருமென்று. உன் கடிதம் வராத என் நாட்கள் வீண் எனில்? நீ வராத என் வாழ்க்கை என்னவாகும்?
"நமக்குள் இருக்கும் இந்த உறவின் பெயரென்ன?" என்று நீ கேட்டபோது என்னிடம் விடையில்லை!. நான் படித்த புத்தகங்கள், நான் வியந்த சிந்தனைகள், நான் கண்ட உண்மைகள், நான் அறிந்த மொழிகள் என அத்தனையிலும் தேடினேன் எங்கும் எனக்கு பதிலில்லை.இறுதியில் தமிழிடம் என் வலியெல்லாம் கூறி விடை கேட்டேன். சிறிய மௌனத்திற்கு பின் நம்மை வளர்த்த தமிழ், நீ கண்டு வியந்த தமிழ் என்னிடம் சொன்னது "இதன் பெயர் காதல் என்று!" நான் ஏதும் சொல்லவில்லை. மௌனித்திருந்தேன்.காரணங்கள் ஏதும் இன்றி என்னிரு கண்களிலும் சிறு துளிகள் உதிர்ந்தன. அந்த துளிகளின் வெப்பத்தில் நான் அணிய வைத்திருந்த முகமூடிகள் அனைத்தும் வெந்து பொசிந்தன.
இந்த இரவு இன்னும் மிச்சமிருக்கிறது, அந்த ஒற்றை மரத்தின் மேலமரும் சிறு பறவைகளின் பாடல் காற்றை நனைக்கிறது.உடைகளற்ற நிசப்தமான மௌன வெளியில் என் மனம் சஞ்சரிகின்றது. அது நம்மால் பெயரிடப்படாத அந்த உணர்வுகளால் நிரம்புகிறது.என் கண்களில் மேலும் சில துளிகள் உதிர்கின்றன, அவை உதட்டினில் பட்டு இனிக்கின்றன.மேகத்தின் நடுவே நிலவும் கொஞ்சம் எட்டிப்பார்க்கிறது, அது நான் இதுவரை பார்க்காத உன் முகத்தை நினைவுபடுத்துகின்றது.ஒரு நாள், சிறு பறவைகள் சப்திகின்ற இந்த இரவை நாம் இருவரும் அருகில் அமர்ந்து அழகாக்குவோம், அந்த நாளை நோக்கி கொஞ்சம் சீக்கிரம் வாடி.
இப்படிக்கு உன்,
?.
19 comments:
தமிழ் வாழ்க. மனதில் இருந்து கசியும் உணர்வுகளை மிகவும் துல்லியமாக பிரதிபலிப்பதில் தாய் மொழிக்கு நிகர் தாய் மொழி.
Vignesh, is it possible to remove the word verification. You can add some widgets to catch spams, if that is your intention here.
சொல்லாலும் சொல்ல முடியாமல், வார்த்தைகள் வற்றி, மௌனத்தில் சங்கடம் கொண்டு, கடிதங்களில் மட்டும் உறவை பரிமாறும் உன்னதமான உண்னர்வுகளை தமிழாலும் சொல்லி தீராது.
Da! Thamilaiyum Kalakara!!! Padicha oru nimisham manasu ganam anadhu, eno theriyala ???
யாரோ ரொம்ப ஏக்கப்படற மாதிரி இருக்கே...
@ raj, barath
நன்றி, வாழ்க தமிழ்!
@ uma
அப்படியா சொல்லவேயில்ல?
it is stranger than fiction, thanks 4 visiting:))
என்ன ஒரு இனிய அதிர்ச்சி! :த
>>உன் கடிதம் வராத என்னுடைய நேற்று இன்னும் முடியவில்லை, அது உன்னுடைய நாளைக்குள் பிரவேசித்துக்கொண்டிருகிறது
>>இந்த இரவு இன்னும் மிச்சமிருக்கிறது, அந்த ஒற்றை மரத்தின் மேலமரும் சிறு பறவைகளின் பாடல் காற்றை நனைக்கிறது.உடைகளற்ற நிசப்தமான மௌன வெளியில் என் மனம் சஞ்சரிகின்றது. அது நம்மால் பெயரிடப்படாத அந்த உணர்வுகளால் நிரம்புகிறது
இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்! கலக்கிட்ட போ!
ஏக்கங்கள் நிறைவேற வாழ்த்துகள்! ;)
Aaha Aaha.. :-) As usual lovely post... All the more special cuz it's your first one in Thamizh... Kalakita!!! Ore feelings ah iruke ;-) ;-)
@ aravind
thanks da, seriously its great to hear those words from u... neenga tamil periyava:)
மிக்க நன்றி!!
@ Milinta,
enna pee-lin-ghu? onnu illa... just a scribblings of a spotless mind..:)
and THANKS 4 VISITING:)
hi vignesh,
where do u get to watch world cinema films ?
Is there a library where u get DVDs ?
I don think there is a World movie library in chennai!! I haven been to one, better download from the net!!
1)download http://www.utorrent.com/ client
2)Go to www.isohunt.com or any other torrent portal, type the movie name download the best torrent
3)open it using utorrent client, and download the movie, and voila u have it
4)els u can get it from the bazzar!!
:)
the post feels so deeply down, the way u have brought out the essence, and the feel of readin in ur mother tongue jus adds flavour to it
u shud write more in tamil too
Spontaneous flow of powerful emotions
@ Junk
Thanks for those kind words, I too dream of writing more in tamil but pakalam, it has 2 be special coz tamil is SPECIAL!
PS:"ur mother tongue??" so tamil is not urs?.. thats interesting!
@anon
Thanks dude/dudette/sir/madame!
choose the best!
and plz if u can leave a name, coz at times ppl think that i comment on my own blog-nu :P...
Vignesh
This post is even better than the previous one.
Vignesh
This post is even better than the previous one.
Strikes a cord deep within...very beautiful...
I will definedly visit again to check for more thamizh posts ...
I wish i could write so beautifully in thamizh....i always mess up my spellings...
thanks for the info
From the comments , i felt you have written something beautiful..
but i couldn't read anything..
i liked your blog..
wishes..
me too blog..
MIP
Ok, I have to say i read tamil poorly, so got K to read this to me... and I loved it.. Unfortunately for K , he has to write me one like this soon or no food for a month :) !
@Prabakar
Thanks a ton!!
@Archana
Try google transliteration, but spellings are a really a tough job!!And i too wish i would write more in tamil:))
Thanks a lot for visiting..
@man in painting
I should have written a translated version of it, maybe soon ill try that..
Thanks a lot for visiting:)
@ANU,
i think K would be really angry with me... plz patha paavama iruku.. spare him:)
i believe ur comment ws the greatest compliment that i got for the post...thanks!
Post a Comment