என் முதல் கவிதை முயற்சி...குழந்தைகள் கூட மழையை முறைத்துக்கொண்டிருந்த-உயிர்ப்பில்லாத ஒரு மாலைப்பொழுதில் எழுதியது ..
இந்த மழைக்காலம்.
இருள் கவிந்திருந்த இந்த மாலையில்
தூறலுடன் பெய்கிறது இறுதி மழை
காமத்தில் வடிந்த எச்சில் போல்
காயத்தில் கசிந்த உதிரம்போல்
கிழவியின் அழுகை போல்
துர்கனவின் சிறுநீர் போல்
ரசிக்க ஆளின்றி என் வீட்டு
சாக்கடையில் விருப்பமில்லாமல்
பெய்கிறது - யாவரும் பழகி சலித்த மழை
வானம் பார்த்துவிட்டு
வீட்டுக்குள் நான் வந்த நொடியில்
ஏனோ இறந்தேபோய்விட்டது
இந்த மழைக்காலம்.
13 comments:
ரசிக்க ஆளின்றி என் வீட்டு
சாக்கடையில் விருப்பமில்லாமல்
பெய்தது - யாவரும் பழகி சலித்த மழை
Lyrical.Period.
Mudhal kavidhai enbadhey namba mudiuavillai.
மழைகாலத்தைப் பற்றி வித்தியாசமான பார்வை.
நான் ரசித்த வரிகள்
ரசிக்க ஆளின்றி என் வீட்டு
சாக்கடையில் விருப்பமில்லாமல்
பெய்கிறது - யாவரும் பழகி சலித்த மழை
அவ்வளவாக ரசிக்காதது.
காமத்தில் வடிந்த எச்சில் போல்
காயத்தில் கசிந்த உதிரம்போல்
கிழவியின் அழுகை போல்
துர்கனவின் சிறுநீர் போல்
@ Aravind
நம்ப வேண்டும் :), இதுவே என் முதல் கவிதை :) வருகைக்கு நன்றி ...
@ நன்றி உமா.
உங்களுக்கு அவ்வளவாக பிடிக்காத அந்த வரிகள் மழையை பற்றிய சில கோரமான உருவகங்களை தருகின்றன...மழையை அவ்வாறு நாம் கற்பனை செய்ததில்லை...
செய்தலும் தவறில்லை என்றே தோன்றுகிறது...
இவை எல்லாம் மீறி பார்த்தாலும் நான் ஒரு மழை காதலன், மழைப்பெண்ணின் காதலன். இந்த முகங்களையும் அவளே எனக்கு காட்டுகிறாள் , இந்த கோரத்திற்கும் சேர்த்தே அவளை நான் காதலிக்கிறேன். :)
இவை எல்லாம் மீறி பார்த்தாலும் நான் ஒரு மழை காதலன், மழைப்பெண்ணின் காதலன். இந்த முகங்களையும் அவளே எனக்கு காட்டுகிறாள் , இந்த கோரத்திற்கும் சேர்த்தே அவளை நான் காதலிக்கிறேன். :)
Innum Oru mazhaivil Manithan.....
ரசிக்க ஆளின்றி என் வீட்டு
சாக்கடையில் விருப்பமில்லாமல்
பெய்கிறது - யாவரும் பழகி சலித்த மழை
Salithavargalukku Serthey Peyigiradha indha mazhai,
நல்ல கவிதை. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.
@ Barath & Aravind
நன்றி :)
நல்ல முயற்சி !!! வாழ்த்துக்கள்.
//ரசிக்க ஆளின்றி என் வீட்டு
சாக்கடையில் விருப்பமில்லாமல்
பெய்கிறது - யாவரும் பழகி சலித்த மழை //
வித்தியாசமான உருவகம்...
Nalla kavithai,
vazhiyum azaganathae, evvazhavu azagana kavithaigal ezutha thundugirathae
eppadikku,
ungal pazhaya nanban,
@ Daai Vijaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaay
dai im really really glad that u droppen in... nothin els made me glad for sometime now :)
U r writing at a greater standard and saying this is the first attempt!!! Makes it a unbelievable work, and ur posts are great to read and in thamizh i enjoyed it much more.. and this one is refreshingly a different "Mazhai Kavithai". There are so many times we were busy in traffic or in other things not in a appreciating mood and at that times i wondered how all Mazhai Kavithaigal i read was only in enjoying mood, when in reality so many times rain was unnoticed, unwanted and cursed... and this post made it complete for me..Keep Rocking..
நன்றி மருது...
ஒரு கவிதை முழுமையான அர்த்தத்துடன் வாசிக்க படும் பொது அந்த கவிதை பிறப்பதற்கான காரணம் முழுமை அடைகிறது...
thanks for your kind words... ill try my best to keep up :)
hi,
the page u seem to have posted last is not opening ..something about the society
??? why so such a sad one about the rain, my fav thing! and usually all poets (like you ;) ) usual'a adhoda azhaga dhaan solluvaanga.. idhu vithyasama irundhuchu..
but when you feel extremely empty, i guess, even the rain does not seem inviting! Sigh!
Post a Comment